சஹ்ரானின் முதலாவது இலக்கு தப்பியது

அவரது முதலாவது இலக்கு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற ​எசல பெரஹராவாகும். அந்த பெரஹா மீ​தே, தாக்குதல்களை நடத்துவதற்கு சஹ்ரான் முதலாவதாக திட்டமிட்டிருந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், 2019 ஜனவரி 16ஆம் திகதியன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் பெருந்தொகையில் வெடி​ப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சம்பவத்துடன் சஹ்ரானுக்கு தொடர்பு உள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது என அவ்வறிக்கையில் ​மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.