சுதந்திரத்தை கொண்டாடுவோம்

எமக்கு கிடைத்த சுதந்திரத்தில் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்கும் சமத்துவமான உரிமையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்தும் போராடுவோம்.

எதிர்காலத்தில் அப்படி ஒரு சமத்துவமான உரிமைகள் கிடைத்தால் சகல இலங்கை மக்களுக்குமான பொது உடமை சமுதாய வாழ்வை உருவாக்குவதற்காக போராடுவோம்.

இதற்குள் நான் பிறந்த தமிழ் சமூகத்திற்குள் புரையோடி இருக்கும் சாதிய கட்டுமானத்தை உடைத்து சமூக நீதியை நிலை நிறுத்த போராடுவோம்… பால் சமத்துவத்தை உறுதி செய்ய போராடிக் கொண்டே இருப்போம்.

அதுவரை பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்துதாவது எமக்கு சுதந்திரம் கிடைத்து என்று மகிழ்ந்திருப்போம் கிடைத்த ஒரு சுதந்திரமாவது போற்றுதலுக்குரியதுதானே.