சுன்னாகம் நீர் மாசு, பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வட மாகாண அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளருக்கும் மல்லாகம் நீதவானால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.. 2014 ஆம் ஆண்டு உடுவில் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரேதச வைத்திய அதிகாரிகளால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுன்னாகம் பகுதியில் உள்ள மின் நிலையத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு மல்லாகம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.