சுமந்திரன் – மஹிந்தா இன்று தனியாக சந்திப்பு

சுமந்திரன் – மஹிந்தா இன்று தனியாக சந்தித்து ஒருமணி நேரம் பேச்சு. ஏனைய தமிழரசு கட்சியினரும் மற்றும் சித்தார்த்தன் செல்வமும் இந்த சந்திப்பில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பின் போது ஏற்கனவே ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் பற்றி தெரிவித்த கருத்துக்களை பிரதமர் சுமந்திரனுக்கு விளக்கினார். மேலும் புதிய அரசியல் யாப்பு மாற்றம் ஒன்று 2025 வரையில் உருவாக்குவதற்கு பொறுப்பான அமைச்சு பதவி பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இச்சந்திப்பில் பொது தேர்தல் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை எனவும் இது தேர்தல் தொடர்பான மஹிந்தா கட்சியினரது நிலைப்பாட்டினை சுமந்திரன் தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளதை காட்டுகின்றது எனவும் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.