செங்டு துணைத்தூதரகத்தை மூடுமாறு ஐ. அமெரிக்காவுக்கு சீனா உத்தரவு

சீனாவின் செங்டு நகரத்தில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் துணைத் தூதரகத்தை மூடுமாறு ஐக்கிய அமெரிக்காவுக்கு இன்று சீனா உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டனிலுள்ள சீனாவின் துணைத் தூதரகத்தை சீனா மூடுமாறான ஐக்கிய அமெரிக்காவின் இவ்வார வலியுறுத்தலொன்றுக்கு சீனா பதிலளித்துள்ளது.