டிரம்ப் உத்தரவுக்கான தடையை நீக்க அமெரிக்க கோர்ட் மறுப்பு

உட்பட, ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் உத்தரவுக்கு கோர்ட் விதித்த தடையை நீக்க, மேல்முறையீட்டு கோர்ட் மறுத்துள்ளது. அமெரிக்க அதிபராக, சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப், ஈராக், ஈரான், சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள்,
அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தார்.

இதற்கு அமெரிக்காவிலும், பல்வேறு நாடுகளிலும் கடும் எதிர்ப்பும், விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கிடையில், டிரம்ப் அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சியாட்டில் கோர்ட், அதை செயல்படுத்துவதற்கு தடை விதித்தது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள அதிபர் டிரம்ப், நீதிபதி குறித்தும், நீதித்துறை குறித்தும்
கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மேல்முறையீட்டு கோர்ட்டில், டிரம்ப் அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்’ என, மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தடையை நீக்க மறுத்த, மேல்முறையீட்டு கோர்ட், இது குறித்த பதிலளிக்கும்படி, அரசு உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளவர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதற்கு, அரசின் சார்பில் பதிலளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டதால், கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள அதிபர் டிரம்ப்புக்கு, இந்த கோர்ட் உத்தரவு, மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.