“தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர்”

சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டபோது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி “நாங்கள் ஒற்றுமைய உள்ளோம். ஒற்றுமையாக இருப்போம். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி ஹனுமான்கார்ஹ், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.