தலைவர் ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் அவரோடு கூட மரணித்த நூற்று கணக்கான போராளிகளுக்கும் 30ம் ஆண்டு அஞ்சலி

தோற்றம்                                                            மறைவு
28-08-1952                                            06-05-1986

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம்
சிறீ என்று அன்பாக தமிழ் ஈழ மக்களால் அழைக்கப்படும் சிறீசபாரத்தினம் ஒரு மாபெரும் தமிழ் ஈழ சுதந்திர போராட்டத் தலைவர் . தமிழ் ஈழம் மலர வேண்டும். அதற்கு ஒரு வழி போர் மட்டுமே என தீர்மானித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய ராணுவத்தை உருவாக்கி இலங்கையில் ஆட்சிசெய்து கொண்டிருந்த சிங்கள அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன். கல்வி, தேசத்தொண்டு, பத்திரிகை என பல வழிகளில் தமிழ் ஈழ மக்கள் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர்!
ஒவ்வொரு தமிழனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் போராடத் தூண்டிய தலைவர் சிறீ சபாரத்தினத்தின் கொள்கைகள் போற்றத்தக்கது. இவர் மீது மேற்கொண்ட சகோதர படுகொலையின் மூலம் எமது இனத்தின் ஒற்றுமையும் விடுதலையும் தொலைந்து விட்டது.

(WWW.TELO.ORG)