திருகோணமலையில் நினைவஞ்சலி

திருகோணமலையில் உள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவு அரங்கில்  நினைவஞ்சலி நிகழ்வு, நாளை புதன்கிழமை  (27) மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 1983ஆம் ஆண்டு, ஜூலை 25, 27ஆம் திகதிகளில்  வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்பட 53 வீர மறவர்களினது  நினைவாக அமைக்கப்பட்ட இந்த தியாகிகள் அரங்கில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.