திருநங்கை செய்திவாசிப்பாளருக்கு ஏற்பட்ட கொடூரம்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  மர்வியா மாலிக்கை லாகூர் நகரில் வைத்து மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்  இது குறித்து  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறித்த புகாரில்  “எனக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. இதற்கு பயந்து நான் சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்தேன். ஆனால் ஒரு அறுவை சிகிச்சைக்காக தற்போது லாகூர் வந்தேன். அப்போதுதான் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகப்  பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.