துயர் பகிர்வு

தோழர் ஸ்ரனிசின் தாயார் கனகம்மா அருளம்பலம் தனது 85 வயதில் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்கிளப்பு பெரிய கல்லாற்றில் இயற்கை எய்தினார். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவருடைய முழுக் குடும்பமுமே அற்பணிப்புடன் செயற்பட்டது.
அவர் தனது இரண்டு பிள்ளைகளான தோழர்கள் காளி,
மனோ ஆகியோர் ககோதரப்படு கொலைக்கு பலிகொடுத்தபின்னும் தனது முதிய வயதிலும் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தவர். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் கட்சியின் வேலைத்திட்டங்களில் பணியாற்றிய பல தோழர்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் பணிசமான பங்களிப்பை நல்கியிருந்தார்.அந்த தியாகத்தாய்க்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.

பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயக் கட்சி(SDPT)