துயிலும் இல்லம் முன்பாக இருந்து ராஜபக்‌ஷர்களுக்கு எதிர்ப்பு வெடித்தது

பேரணியில் பங்கேற்றிருந்தவர்களுக்கு தண்ணீரூற்று நீராவிப்பிட்டி பகுதிகளை சேர்ந்த வணிகர்கள், குடிண்ணீர்களை வழங்கி போராட்டத்தினை வலுச்சேர்த்துள்ளார்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் சார்பாக வன்னி மேம்பாட்டு பேரவை ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மதகுருமார்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள்,முச்சக்கரவண்டி சங்கத்தினர்,வணிகர்கள் வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் க.சிவனேசன் மற்றும்  பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.