தேடப்பட்ட திமுக எம்.பி சரண்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு (60). பனிக்குப்பத்தில் கடலூர் தி.மு.க., எம்.பி., ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி  கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையில் பொலிஸார்  விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

 இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., ரமேஷை தேடும் முயற்சியில் சிபிசிஐடிபொலிஸார் ஈடுபட்டனர். இந்நிலையில், பண்ருட்டி நீதிமன்றத்தில் முதலாவது மாஜிஸ்திரேட் கற்பகவள்ளி முன்பு இன்று சரணடைந்தார்.