தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்

மேல்மாகாணம், தனிமைப்படுத்தப்பட்டப் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (23) முதல் பாடசாலைகளை திறக்கப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளைத் திறப்பதற்கு கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான செயலணி,
சுகாதாரத் தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் பகுதிகளில் பஸ்களில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்குச் விஷேடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.