தோழர் எம்.ஜி.பசீர் எம்மைவிட்டுப் பிரிந்தார்!

தோழர் எம்.ஜி.பசீர் நேற்றைய தினம் (பெப்.12) புத்தளம் வைத்தியசாலையில் காலமாகி, இன்றைய தினம் நல்லடக்கம் செய்த துயரமான செய்தி வந்திருக்கிறது.தோழர் பசீர் யாழ்ப்பாண முஸ்லீம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். 1990 ஒக்டோரில் புலிகள் வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை வெறுமனே 2 மணித்தியால முன் அறிவித்தலில் வடக்கிலிருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்தபோது தனது மக்களுடன் சேர்ந்து வெளியேறி அவர்களைப் போலவே மன உளைச்சலுடன் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்.