நாளை முதல் ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தைவாய்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் விசேட வேலைத்திட்டமொன்று நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதிலிருந்து உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும் என, கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.