நீர்வை பொன்னையன் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டார்

இலங்கைக் கம்யூனிஸ் கட்சி, அதன் வெளியீடுகள், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பிளவுபட்ட கட்சியில் புரட்சிகர முன்னணி அணி, 83 வன்முறையைத் தொடர்ந்து யாழ்மண்ணில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சத்துணவுத் திட்டச் செயற்பாடுகள், 90 இடப்பெயர்வின் பின் மீண்டும் கொழும்பில் விபவி மாற்றுக் கலாசார மையத்தின் ஊடாக செயற்பாடுகள், ,இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றச் செயற்பாடுகள் என ஓய்வின்றி அவரது பணிகள் தொடர்ந்தன.

உங்களுடன் பழகி, பேசி, விவாதித்து , கொழும்பில் களித்த தருணங்கள் இன்று, மேல் எழுகிறது.
சிறுகதை, நாவலாசிரியர். பன்னூலாசிரியர், செயற்பாட்டாளர். மூத்த தோழருக்கு இதயத்து அஞ்சலி!

இவரது நூல்கள்….(முழுமையான விபரம் இல்லை )
மேடும் பள்ளமும் (1961)
உதயம் (1970)
மூவர் கதைகள் (1971)
பாதை (1997)
வேட்கை (2000)
உலகத்து நாட்டார் கதைகள் (2001)
முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002)
நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004)
நினைவலைகள் (2009)