நெடுந்தீவில் 5 ஆண்டுகளாக வைத்தியர் இல்லை

நெடுந்தீவு வைத்தியசாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (14) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,