பத்தேகம சமித்த தேரர் மறைவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் மறைவு செய்தி கிடைத்ததுமே உடனடியாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தோழர் யோகரட்னம் அவர்களுடனேயே தகவலைப் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் நட்பின் ஆழம் அறிந்தவன் நான்.அந்த நட்பின் பின்னணியில் பெரியதோர் வரலாறே உண்டு. தோழர் யோகரட்னம் “தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும் ” எனும் நூலை எழுதியவர்.