பத்தேகம சமித்த தேரர் மறைவு

இலங்கையின் வடமாகாணத்தில் இடம்பெற்ற சாதியப் போராட்ட வரலாற்று சாட்சியம் இந்த நூல். இந்தப் பின்னணியிலே வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் பௌத்தத்தை தழுவிய காலம் ஒன்று இருந்தது. அந்த நாட்களில் பௌத்தத்தை தழுவி தானும் மதகுருவாகும் நோக்குடன் தோழர் யோகரட்னம் தென்பகுதிக்கு வந்த காலத்தில் இருந்தே பத்தேகம சமித்த தேரர் ஆகியோரின் நட்பு தொடங்கி இருக்கிறது.

பின்னாளில் தோழர் யோகரட்னம் பௌத்த மதகுரு நிலையைத் தொடரவில்லையாயினும் இவர்கள் இருவரதும் நட்பு தொடர்ந்திருக்கிறது. தோழர் யோகரட்னம் இலங்கை வந்தால் கட்டாயமாக காலிக்கு சென்று விகாரையில் அவரைச் சந்திப்பது முதல் பத்தேகம சமித்த தேரர் பிரான்ஸ் சென்றால் யோகரட்னம் தோழரைச் சந்திப்பதுவரை தொடர்ந்த வரலாறு அது. இன்றைய உரையாடலிலும் இவருடனான பல நினைவிகளை பகிர்ந்து கொண்டார் தோழர் யோகரட்னம்.

இலங்கையில் இன, மத நல்லிணக்கத்துக்காக தொடர்ச்சியாக ஒலித்த குரல் பத்தேகம சமித்த தேரர். தென்மாகாண மலையகத் தமிழர்களின் நிலை குறித்த கரிசணை அதிகம் இவரிடம் இருந்தது. தமிழிலும் உரையாடக்கூடியவர்.ஓரிரு அரசியல், சமூக கலந்துரையாடல் நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்ட சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடி உள்ளேன்.

சமசமாஜ தரப்பு அரசியல் களத்தில் இருந்து இலங்கைப் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்தவரான இவரே இலங்கையின் முதல் பௌத்த பிக்கு (1994) என நினைக்கிறேன். கொரொனா தொற்றினால் மறைந்த முதல் இலங்கை பௌத்த பிக்குவும் கூட இவராகத்தான் இருக்க வேண்டும். முற்போக்கு சிந்தனை கொண்ட பத்தேகம சமித்த தேரரின் இழப்பு பெருந்துயர். அஞ்சலிகள்.

(Thilakar)