பாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்

இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரொருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர, நீச்சல் பயணத்தை ஆரம்பித்திரு்நதார்.

நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். அவர், தனுஸ் கோடியை சென்றடைந்து மீண்டும் அங்கிருந்து தலைமன்னார் நோக்கி நீந்திவருவார்.

இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அவர், தலைமன்னாருக்கு திரும்பியுள்ளார்.

நீந்திச் சென்று நீந்தியே வருவதற்கு அவர், 28 மணிநேரமும் 19 நிமிடங்களையும் எடுத்துக்கொண்டார்.