பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை

மூத்த தலைவர் சிலர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து டுவிட்டரில் தான் தெரிவித்த கருத்துகளைத் திரும்பப் பெறுவ தாக மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நிலையான, முழுநேரத் தலைமைதேவை எனக்கோரி கட்சியில் உள்ள 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதம் எழுதிய வர்களில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் அடங்கும்.