பிரஸ்ஸல்ஸில் விமான நிலையத்தில் வெடிப்புகள்: 34 பேர் பலி

பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள சவென்டம் விமான நிலையத்துக்கு வெளியே இடம்பெற்ற இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் 170 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் வெளிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது. வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழை வாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.