பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும்: தலிபான்

விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இதனால், தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் மந்திரிகளாக முடியாது என தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சையது கூறுகையில், பெண் மந்திரியாக முடியாது. பெண்கள் மந்திரியாவது என்பது பெண்களுக்கு அவர்களின் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும். 

பெண்கள் மந்திரி சபையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது’ என்றார்.