பெரியண்ணை தோழர்

பெரியண்ணை ஈ.பி.ஆர்.எல்.எவ் ஊடாக ஈழ விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர். அவரது சகோதரி றூபி அன்ரி, மருமகன் அச்சுதன் ஆகியோரும் எம்மோடு பயணித்து உயர்வு தாழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்.

1990 இல் இடம் பெயர்ந்து சென்னை புழல் அகதி முகாமில் தோழர்களுடன் வசித்து வந்த பெரியண்ணை பின்னர் 1997 இல் தோழர்களுடன் நாடு திரும்பி 1998 நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றியவர்.

தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் தோழர் றொபேட்டின் தலைமையின் கீழ் செயற்பட்ட அவர், ஜனநாயக இடைவெளி மறுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மிகுந்த காலப்பகுதியில் நவாலி பகுதியில் கிளை அலுவலகம் ஒன்றை அமைத்து மக்கள் மத்தியில் கட்சிப் பணிகளை முன்னெடுத்தார்.

வருமானத்திற்காக சவர்க்காரம், நெல்லி ரசம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சுயதொழில் முயற்சியிலும் ஈடுபட்டார்.தோழர் றொபேட் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் எம்மோடு பயணித்த அவர் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சிப் பணிகளிலிருந்து விலகி இடம் பெயர்ந்து வவுனியா தோணிக்கல்லில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இப்போது 09.11.2021 அவர் உயிரிழந்த செய்தி அறிந்து துயரடைகிறோம்அவர் எம்மோடு இணைந்து பயணித்த காலங்கள் மறக்க முடியாதவை. எமது போராட்டத்தில் அவரது காத்திரமான பங்களிப்புக்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்.அன்னாரிள் பிரிவால் துயரடைந்திருக்கும் மனைவி மற்றும் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அவரை மரியாதைப்படுத்தும் அஞ்சலியை உரித்தாக்குகிறோம்

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி