‘பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும்’

(எம்.எஸ்.எம். ஹனீபா)

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ், கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இலங்கையின் உயர் கல்வியின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.