போதை ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் வீதி விழிப்புணர்வு நாடகம்

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாடசாலைகளில் போதை ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் இடம்பெற்றுள்ளது. குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கு இணங்க புதன்கிழமை (20) நடைபெற்றுள்ளது.