போதை ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் வீதி விழிப்புணர்வு நாடகம்

போதைவஸ்துக்கு எதிரான வீதியோர நாடகத்தினை கெல்விடாஸ் நிதி நிறுவனத்தின் அனுசரணையுடன், இளைஞர் அபிவிருத்தி அகம் இனைந்து, குளக்கோட்டன் வித்தியாலயம், சிராஜ் முஸ்லிம் வித்தியாலயம்,முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில்  இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில்  இளைஞர் நாடக குழுவினர் திறம்பட நடித்து போதை ஒழிப்பு தொடர்பான பல விடயங்களை முன்கொண்டு வந்துள்ளனர்.

இதில் அகம் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் வே.மோகன் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாயம் சார் அபிவிருத்தி உத்தியோகத்தர், இளைஞர் சேவை அதிகாரி, சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.