போராட்டக்காரர்களை அகற்றியமை தொடர்பில் விவாதம்

இது தொடர்பான விவாதத்துக்காக பாராளுமன்றத்தை கூட்டுமாறு, இன்றைய தினம் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளரான லக்ஸ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால் அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.