பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தக் கவனயீர்புப் போராட்டத்துக்கான அழைப்பை, வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்துள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த 60 ஆண்டுகளுக்க மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றோம். ஆனால், தமிழர்களின் போராட்டத்துக்கு செவிசாய்க்காத அரசாங்கம், தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

“யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட, கிழக்கை இராணுவ மயமாக்கி வரும் அரசாங்கம், தமிழ் மக்களின் கலாசாரா, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன், எமது பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகைகளிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

“இதனடிப்படையில், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை அரசாங்கம் முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

“எனவே, மேற்படி போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.