மனோரி முத்தட்டுவேகம

மறைந்த மனோரி முத்தட்டுவேகம அவர்கள் இனநல்லுறவு மனித உரிமை மனிதகண்ணியத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். ஒரு முன்னேற்றகரமான மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர். பரஸ்பர மரியாதை இங்கிதம் நல்லியல்பு அவரது பின்புலத்தின் உயர் விழுமியங்களை பறை சாற்றின.
1980களின் முற்கூற்றில் 1983 இற்கு முந்திய பாராளுமன்றத்தில் இனசமூக நல்லுறவிற்கு நம்பிக்கைதரும் வார்த்தைகள் ஏதும் இருந்ததென்றல் அவரது கணவர் தோழர் சரத் முத்தட்டுவேகம இலங்கைகம்யூனிஸ்ட் கட்சிஅவர்களிடம் இருந்துதான். அவர் பாரதப்போரில் எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்ட அபிமன்னுவைப்போல் இனசமூக நல்லுறவிற்காகவும் அனைத்துமக்களின் உரிமைக்காகவும் போரிட்டார். அவருடைய தகப்பனார் கொல்வின் இலங்கையின் இனசமூக உறவுகளூக்கு பாதகமான தனி சிங்கள சட்டம் பிரிவினக்கு வழிவகுக்கும் என 1950 களில் இலங்கை பாராளுமன்றத்தில் முன் எச்சரிக்கை செய்தவர். அற விழுமியங்களின் பாரம்பரியம் அவரை செதுக்கியது. அவர்களது புதல்வி ரமணி மனித உரிமை ஜனநாயகம் பெண் உரிமை செயற்பாட்டாளர்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின்மறைவிற்கு எம் அஞ்சலிகள்!