மூவரும் டளஸூக்கு ஆதரவு

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான மூவ​ர், இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டளஸ் அழகபெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே இவ்வாறு தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பில், இன்று (19) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.