‘மேற்குலகை நம்பி ஏமாற வேண்டாம்’

மதங்களுக்கிடையே மோதல்கள் இடம்பெறுவதற்கு வழிசமைக்காது, அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டுமென, அமரபுர நிக்காயவின் மஹாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் வலியுறுத்தினார். கொழும்பில் இன்று (10) நடத்தப்பட்ட சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.