மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்க பாதுகாப்புப் படைகள் முயல்கையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதராஸாக்கள் அல்லது இஸ்லாமிய மதப் பாடசாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொலிஸாருடனும், எல்லைப் படைகளுடனும், கிழக்கு பிரஹ்மன்பரியா மாவட்டத்தில் மோதியிருந்தனர்.

இந்துப் பெரும்பான்மை இந்ந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களை பிரதமர் மோடி ஒடுக்குவதாக பங்களாதேஷிலுள்ள பல இஸ்லாமியக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.