யாழ்ப்பாணம் – “போதையற்ற தேசம்”

யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றுவரும் “போதையற்ற தேசம்” தேசிய வேலைத் திட்டத்தின் 8 ஆவது மாவட்ட நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு யாழ்.பொதுநூலகத்தின் அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சித்தார்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பா.உ. சித்தார்த்தனைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறெவரும் போதையற்ற தேசத்தில் பங்கு பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரதிநிதி போதை வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்து கோடீஸ்வரன் ஆனார் எனவும், இப்போதும் இவரது வர்த்தக் கிளை தமிழ்நாடு திருச்சி பகுதியில் இயங்குவதாகவும் அறிய முடிகின்றது, இதனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் “போதையற்ற தேசம்” நிகழ்வில் கலந்து கொள்வது மனச்சாட்சிக்கு விரோதம் என்பதால் இவர் கலந்து கொள்ளாமல் தவித்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகின்றது.