யாழ். இளைஞர்கள் கைது

இரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யுhழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர். குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப்பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 8 பேரையும், மதுபோதையில் நின்ற 6 பேரையும், அடிபட்ட 1 நபரையும், மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் உட்பட 16 பேரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 16 பேரும் யாழ். பொலிஸ் நிpலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.