பற்குணம் (பதிவு 17 )

பற்குணத்தோடு அவரது நெருங்கிய நண்பர்களான டிவகலாலாவும் நிர்வாகசேவைக்கு தெரிவானார் .இன்னொரு நண்பரான ரீ.ஈ. ஆனந்தராசா பொலிஸ் நிர்வாகசேவைக்கு தெரிவானார்.பற்குணம் நிர்வாக சேவைக்கு தெரிவானதில் அவருடைய பல்கலைக்கழக ஆசிரியர்களும் நண்பர்களும் வரவேற்றனர். பற்குணம் படிக்கும் காலத்திலும் பின் விரிவுரையாளரான பின்னும் பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார்.இதில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் இடதுசாரிக்கோட்பாடுகளை ஏற்காதவர்.ஆனால் மிக நல்ல மனிதர்.இவருக்கு இறுதி வருடங்களில் யாராவது ஒரு மாணவன் பரீட்சையில் சித்திபெற தவறினால் மிகவும் கவலைப்படுவாராம்.ஆனால் ஒரு சில பேராசிரியர்கள் இதைப் பற்றிக் கவலைகொள்வது இல்லை.

வித்தி பரீட்சையில் தவறும் மாணவனை நினைத்து கவலைப்படுவதில்லை.அவன் படிப்புக்காக வீட்டில் இருந்து மாடாக உழைக்கும் அந்த மாணவ்னின் பெற்றோரை நினைத்தே கவலைப் படுவார்.ஒரு மாணவன் தவறும்போது ஒரு வருட மேலதிக பணத்தேவை என்பது எவ்வளவு சுமையானது என்று வேதனைப்படுவார்.

ஒரு முறை பேராசிரியர் வித்தியானந்தன் வெளிநாடு சென்றதால் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கேள்வியை அவர் திரும்பி வருமுன் ஒரு பேராசியர் தயாரித்துவிட்டார்.அவரின் நோக்கம் பல மாணவரகளைப் பெயிலாக்குவது.வித்தியானந்தன் திரும்பி வந்தபோது வினாத்தாள்களைப் பார்வையிட்டார்.நிலைமை விளங்கிவிட்டது.யோசனை செய்தார்.

அன்று பல்கலைக்கழக தமிழ் சங்க தலைவராக டிவகலாலா இருந்தார்.அவரிடம் தன்னுடைய வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விபரங்களை மாணவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.கூட்டத்துக்கு சகல மாணவரகளையும் கண்டிப்பாக வரவேண்டும் என கட்டளையிட்டார்.

அந்தக் கூட்டத்தில் தன் பயணங்களின் விளக்கம் என்னும் பெயரில் வரவிருக்கும் தேர்வில் வினாக்கள் எப்படி அமையும் என நாசூக்காக தெரிவித்தார்.

அவருக்கு பிடித்தமானவரகள் ரோனி ராஜரத்தினம் ,கைலாசபதி என்றபோதும் வித்தியானந்தன் நினைவுகளை அதிகம் பகிர்ந்துகொள்வார்.தமிழரின் விருந்தோம்பல் பண்பாடு என்பாராம் வித்தி.
நிர்வாக சேவைக்கு தெரிவானபின் விரிவுரையாளர் வேலையில் இருந்து விலகி மட்டக்களப்பு பயணமானார் .ஆனால் இறக்கும்வரையும் பல்கலைக் கழகத்துடனான தொடர்புகளை அவர் விடவில்லை.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)