யாழ்- போதனா வைத்தியசாலையில் இதய சத்திரசிகிச்சை வெற்றி

யாழ்-போதனா வைத்தியசாலையில் நேற்றும் (20) இன்றும் (21) வெற்றிகரமாக திறந்த இதய மாற்று அறுவைச் சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். எம்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். விசேட வைத்தியகுழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பல இதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மிக அண்மையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட சத்திரசிகிச்சை இதுவென்று அவர் மேலும் குறிப்பிட்டள்ளார். வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான ஒருவருக்கு நேற்றைய தினமும், இன்றும் திறந்த இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையை முன்னெடுத்த வைத்தியகுழுவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.