ரிஷாட் கட்சியுடன் கூட்டணிக்கு இட​மே இல்லை: சஜித் அதிரடி பதில்

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியுடன், கடந்த பொதுத் தேர்தலில், கூட்டணி அமைத்து களமிறங்கினோம். என்றாலும், தற்போது புதிய கூட்டணியொன்று உருவாக்கப்படுகின்றது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, ரிஷாட் பதியுதீனின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுடன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சஜித் பிரேமதாஸவும் இன்று (28) சென்றிருந்தார். இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.