வடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.

இந்நிலையில் அவர் வடக்கின் தலைவிதியை முற்றிலும் மாற்றியமைக்க திட்டமொன்றை வகுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது. அதன் பிரகாரம் அவர் தனது தனிப்பட்ட தொடர்பு வலைப்பின்னலை பயன்படுத்தி வடக்கின் அபிவிருத்திக்காக சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடவைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 7200 கோடி ரூபாக்களை வடக்கில் முதலிட வைப்பதன் ஊடாக வடக்கில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இத்திட்டத்தினை அறிந்து கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பரெலிய என்ற தெருத்தேங்கையை வழிப்பிள்ளையாருக்கு அடித்ததுபோல் புதிய அரசின் பங்காளிகளாக மாறி தாங்களே தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியையும் தொழில்வாய்ப்பையும் கொண்டுவந்தாக காதில் பூச்சுத்துவதற்காகவே அரசுடன் இணைய தமது விருப்பத்தினை தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த கையுடன் புலம்பெயர் தமிழ் பிரநிதிகள் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்களை நாட்டுக்கு அழைத்திருந்த கோத்தபாய வடக்கில் இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். அத்துடன் வடகிழக்கில் அவர்களை முதலிடுமாறும் அவ்வாறு முலிடுவதன் ஊடாக அங்குள்ள மக்களுக்கு தொழில்வாய்பினை பெற்றுக்கொடுக்குமாறும் கோரியிருந்தார். ஆனால் அக்காரியம் நிறைவேறியிராத நிலையில் தற்போது அவர் தனது சொந்த தொடர்புகள் ஊடாக இக்கருமத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.
Written By இலங்கைநெற்