வடக்கில் அடை மழை; 66 ஆயிரத்து 223 பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக வடக்கில் 19,448 குடும்பங்களை சேர்ந்த 66,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த சில தினங்களாக வடக்கிலும் கடும் மழை பெய்து வருவதால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.