வடமாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்து

வடமாகாண ஆளுநராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தனக்கு திருப்பதியளிப்பதாக அம்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவராலேயே தமிழர்களின் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.