“வாய்மையே வெல்லும்” தமிழகத்தில் சொல்லாகவும். கேரளத்தில் செயலாகவும் இருக்கிறது

“வாய்மை வெல்லும்”, இது தமிழக அரசின் இலச்சினையில் உள்ள சொற்றொடர். பேரிடர் மேலாண்மையில் இந்த சொற்றொடர்தான் உலகே சொல்லும் முதல் மந்திரம். ‘உள்ளது உள்ளபடி’ சொல்லி, “மக்கள் முதல்- மற்றவையெல்லாம் பின்னர்” என இயங்கும் அரசுகளே பேரிடரை வெற்றி கொள்கின்றன. தைவானும் கொரியாவும் ஜப்பானும் அப்படித்தான் மீண்டெழுந்துள்ளன. அப்படி நம் கண் முன்னே வெற்றி பெற்ற நம் தேசத்து மாநிலம் கேரளம். அங்கே புதிய நோயாளிகள் வருவது முழுமையாக கட்டுப்பட்டுள்ளது. மரணங்கள் இப்போது இல்லை. கூட்டு சிகிச்சையில் முதல் நிலை, என கேரளம் மருத்துவத்தில் மட்டுமல்ல, மக்களின் பசி ஆற்றியதில், மனச் சோர்வு நீக்கியதில் இந்தியாவிற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டாக நிற்கின்றது.