“வாய்மையே வெல்லும்” தமிழகத்தில் சொல்லாகவும். கேரளத்தில் செயலாகவும் இருக்கிறது

முக்கியமான விஷயம் இங்கே தமிழகத்தில் மூத்த அதிகாரிகள் சொல்வது போல, ‘கேரளம் குட்டி மாநிலம் கொஞ்சூண்டு மக்கள் தொகை’ என்பது அழுகூணி ஆட்டம். அடர்வில் நம்மைவிட கேரளத்தில் மக்கள் அடர்வு அதிகம். வெளிநாட்டு தொடர்பும், வணிகமும் அதிகம். எனவே கரோனாவுக்கான சவால்கள் மிகஅதிகம்.

இனியாவது இலச்சினையின் சொற்றொடரை உரக்கப் படித்து, உண்மையான சிக்கல், உண்மையான நிலவரம், உண்மையான முன்னெடுப்பு, உண்மையான வலியை தமிழக அரசு சொல்லட்டும். பேரிடரை வெல்ல கேரளம் போல உண்மைகள் மீது எழுப்பப்படும் செயல்பாடுதான் வெற்றி பெறும். மக்கள் நலம் காக்கும்.

கேரளத்தில் பேரிடர் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன?தினம் தினம் உண்மை நிலையை இணையதளத்தில் எப்படி வெளியிடுகின்றனர் என கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.வாய்மை எப்படி வென்றது என புரியும்!

காணொளியைப் பார்க்க….:https://www.youtube.com/watch?v=Kkdxer4fWUo&feature=youtu.be&fbclid=IwAR35TMHRDYP7ZpbBEu6GF1so_LdTW2lLquxmwAOuPEVivwAqMRcN8iyMp_g