வீதிகளில் குப்பை; மார்கழி கோலமிட்டுத் தடுப்பு

கடந்த 2000ஆம் ஆண்டே திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசு கொண்டுவந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் இதை முறையாக செயல்படுத்தவில்லை. 2016ஆம் ஆண்டு திருத்தப்பட்ட விதிகள் அமுலுக்கு வந்த பின்னும் பெரிய முன்னேற்றம் இல்லை. இதனிடையே மத்திய அரசு, ’தூய்மை இந்தியா’ இயக்கத்தை தொடங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கின.

இதன் பலனாக, சென்னை மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் 5 ஆயிரம் தொன் குப்பை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு சென்ற நிலையில், அதில் 725 தொன் குப்பை இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சிக்கு உகந்த பொருளாகவும் மாற்றப்படுகிறது.

சென்னையில் வீடு வீடாக வந்துகுப்பையைப் பெறுவதும் அமுலுக்கு வந்தாலும்கூட பொது மக்கள்கோவில், பள்ளி, மின்மாற்றிகளின் அருகில் குப்பையைக் கொட்டுகின்றனர். இதைத் தடுக்க, மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல 92ஆவதுவார்டு தூய்மை ஆய்வாளர் ஈ.கீதாவின் முயற்சியில், அப்பகுதிகளில் மார்கழி கோலமிட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதை பின்பற்றி தற்போது பல வார்டுகளில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடங்களில் கோலமிடப்படுகிறது.