வெளிநாட்டு பிரஜையின் அங்கத்துவம் தொடர்பில் கவனம்

எந்தவொரு அரசியல் கட்சியிலும், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை உரிமையாக் கொண்டவர்கள் அலுவலகக் கடமைகளில் ஈடுபடக்கூடாது என்பது தொடர்பில், கவனம் செலுத்தவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம், நேற்று தெரிவித்துள்ளது. வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்டவரும், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும் தேசிய ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான ஷலில மூனசிங்க, நிதி மோடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், தேர்தல் ஆணையகத்தால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியது என்றும் காரணம், தேசிய ஜனநாயக் கட்சி, அரசியல் கட்சி என்ற வகையில், அதற்குத் தேவையான சட்டத்துக்குக் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையக அங்கத்தவர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹுலே கூறினார்.

“நாடாளுமன்றமே, சட்டத்தை இயற்றுகிறது. அவற்றை மாற்றுவதற்கு, எமக்கு எந்தவொரு வழியும் கிடையாது” என்று அவர் கூறியதோடு, வெளிநாட்டு பிரஜையொருவரால், அரசியல் கட்சியின் அங்கத்தவராக இருத்தல் தொடர்பில், அந்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இல்லை என்றும் கூறினார். “சட்டத்தை மீறி, வெளிநாட்டு பிரஜையொருவருக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாது” என்று அவர் கூறியுள்ளார்.