ஹிஜாப் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே கல்லூரி நிர்வாகத்தைக் எதிர்த்து மாணவியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் (15) இவ் வழக்கின் தீர்ப்பை கர்நாடக நீதிமன்றம் வெளியிட்டது.

அந்தவகையில் “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது இல்லை எனவும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு விதிக்கப்பட்ட தடை செல்லுபடியாகும்” எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து மாணவிகள் அளித்த இருந்த மனுக்களையும்  தள்ளுபடி செய்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இத்தீர்ப்பினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநிலம் முழுவதும் பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.