122 பேர் பழனிசாமிக்கு ஆதரவு

கடும் அமளிதுமளியினால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட, சபை மீண்டும் 3 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சியினர் இல்லாமல் வாக்கெடுப்பு ஆரம்பமானது. இரண்டு முறை பிரச்சினை ஏற்பட்டதால் குரல் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தாமல் எண்ணிக்கை அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் வாக்களித்தானர். பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி கே.பழனிச்சாமி. நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.