17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய இராணுவம்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன், பனிக் காற்றும் வீசி வருகிறது. கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசினாலும் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றிய வீடியோவை மத்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.