19 நாள்களில் இராஜினாமா செய்த ஈக்குவடோர் சுகாதாரமைச்சர்

ஈக்குவடோரின் சுகாதாரமைச்சர் றொடொல்ஃபோ பர்டான், 19 நாள்கள் மாத்திரம் பதவியிலிருந்த பின்னர் இராஜினாமா செய்துள்ளார். வரிசைக்கு முந்தியதாக, தொடர்புகளைக் கொண்டுள்ள தனிநபர்கள் கொவிட்-19 தடுப்புமருந்தைப் பெற்ற பிரச்சினை குறித்து ஈக்குவடோரின் அரச வழக்குத் தொடருநர்கள் விசாரிக்கின்ற நிலையிலேயே குறித்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.